ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் உட்பட குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப டில்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கு பிரதபலனாக மேக்சிஸ் நிறுவனம் கலாநிதி மாறனுக்கு சொந்தமான நிறுவனத்துக்கு ரூ.3,500 கோடி முதலீடு செய்ததாக வழக்கில் கூறப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் 2015 மார்ச் 2ம் தேதி நேரில் ஆஜராக டில்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட கலாநிதிமாறன், தயாநிதி மாறன், மேக்சிஸ் நிறுவனர் அனந்த கிருஷ்ணன், மேக்சிஸ் நிறுவன செயல் அதிகாரி ரால்ப் மார்ஷல், சைன் டைரக்ட், மேக்ஸிஸ் கம்யூனிகேஷன் ஆஸ்ட்ரோ நிறுவனத்துக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சவுத் ஏசியன் என்டர்டெயின்மெண்ட் ஹோல்டிங்சுக்கும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கை விசாரித்து வரும் சிபிஐயின் கோரிக்கை ஏற்று டில்லி நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டோருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.