கந்தக்கோட்டம் என அழைக்கப்படும் ஸ்ரீமுத்துகுமாரசுவாமி திருக்கோயிலின் பிரமோட்சவத்தின் ஒரு பகுதிதான் இராயபுரத்தில் நடைபெறும் ‘வேடர்பறித் திருவிழா’. அதாவது கந்தக்கோட்டத்தில் இருந்து புறப்படும் முருகப்பெருமான் வள்ளியை சிறைபிடித்து சென்று திருமணம் செய்வதற்காக இராயபுரத்தில் எழுந்தருளுவார். அந்த வகையில் நடைபெறும் இவ்விழாவில் இராயபுரம் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடும் வருகிற பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது. பல்லாண்டு காலமாக நடைபெறும் இம்மாபெரும் திருவிழாவில் இராயபுரம் பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்க சிறப்பான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி S. ஜீவா செய்திருந்தது அனைவராலும் பாராட்டுப் பெற்றது
Check Also
இதனை தடுக்க வேண்டாமா?
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தற்போது சபரிமலை ஐயப்பன் சீசன் முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் தினதோறும் …