வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர்களை வெளியிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் வைத்திருக்கும் 627 பேர் கொண்ட பட்டியல் 2 சீலிடப்பட்ட உரைகளில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை மூத்த வழக்குரைஞர் முகுல் ரஸ்தோகி தாக்கல் செய்தார்.
கருப்புப் பணம் பதுக்கியோர் பெயர் பட்டியலை வெளியிட உச்ச நீதிமன்றம் மறுப்பு:
வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கியுள்ளவர்களின் பெயர் பட்டியல் இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர்களை வெளியிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சீலிடப்பட்ட பெயர் பட்டியலில் உள்ள விவரங்களை வெளியிட முடியாது என்றும், சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் மட்டுமே உறைகளை பிரித்து விவரங்களை பார்க்க முடியும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், கருப்புப் பண விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழுவினர், நவம்பர் மாதத்துக்குள் விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவில் கூறியுள்ளது.
இதையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.