இணையதளத்தில் மட்டுமே கலக்கி கொண்டு இருந்த கூகுள் தற்போது மொபைல், டேப்லட் என அனைத்திலும் கால் பதிக்க ஆரம்பித்துள்ளது. அதற்கேற்ப்ப மோட்டோ ரோலோவை கூகுளி வாங்கியது நாம் அனைவரும் அறிந்ததே ஆகும் தற்போது மோட்டோ ஜி(Moto G) என்ற மொபைல் வெளிவிட்டு விட்டது கூகுள்.
இந்த மொபைல் வரும் ஐனவரி மாதம் விற்பனைக்கு வெளிவந்தாலும் இதற்கான புக்கிங்குகள் இப்போதே பட்டையை கிளப்ப ஆரம்பித்திருக்கிறது அதற்கு காரணம் அதன் குறைந்த விலையும் அதில உள்ள ஆப்ஷன்களும் தான். 4.5 இன்ச் நீளம் கொண்ட இந்த மொபைலில் ஐ போன் 5S ஸ்கிரினை விட அதிக கிளாரிட்டி திறன் கொண்டது மேலும் இதில் Snapdragon 400 SoC with a 1.2 GHz quad-core பிராஸஸர் உள்ளது. இந்த பிராஸஸர் மிகவும் வேகமாக செயல்படும் பிராஸஸர்களில் ஒன்றாகும்
அதோடு இதில் 1GB ரேம், 5MP க்கு கேமரா 1.3MP க்கு பிரன்ட் கேமரா என அனைத்தும் இதில் கிடைக்கிறது. இது அனைத்தயும் விட இதன் முக்கிய சிறப்பம்சம் என்னவெனில் இதில் ஆண்ட்ராய்டு கிட்கேட் ஓ.எஸ் உடன் வெளிவருகிறது. மேலும் இந்த மொபைல் 16GB க்கு இன்டர்நெல் மெமரியும் கொண்டு வெளிவர இருக்கிறது.
இந்த மொபைல் ஏற்கனவே பிரெசிலில் வெளியிட்டுவிட்டனர். நம் இந்தியாவிற்கு இது ஜனவரி மாதம் வர இருக்கிறது இதன் விலை தோரயமாக 12 ஆயிரம் முதல் 14 ஆயித்திற்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு கிட்கேட்டுன் வெளிவரும் மொபைல் இது என்பதால் இதற்கு புக்கிங் கலைகட்டியுள்ளது.
ஆனால் கூகுளிடம் இருந்து மோட்டோரோலாவை வாங்கிய லினோவா இந்த விலையில் மேலும் செல்போன்களை வெளியிடுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.