கொரோனா பரவாமல் தடுக்க அமல்படுத்தபட்டுள்ள ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆணைக்கினங்க O.B.C துறை சார்பாக உதவிகள் வழங்கப்பட்டது வருகிறது.
அந்த வகையில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து சென்னை பரங்கிமலை அருகே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆணைகினங்க O.B.C துறை சார்பாக O.B.C மாநிலதலைவர் T.A.நவீன் முன்னிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவர் மவுண்ட் மார்க்கஸ் தலைமையில் உணவின்றி தவித்து வந்த அப்பகுதி பொதுமக்களுக்கு 50வது நாளாக தொடர்ந்து 1000பேருக்கு உணவு பொட்டலங்கள் தண்ணீர் பாட்டில்கள் வழங்கியும் அரிசி மற்றும் அத்தியாவசிய உணவுபொருட்கள் சமூக இடைவெளியோடு வழங்கப்பட்டு வருகிறது.
இதில் மாநில துணைதலைவர் ஜொசுவா சுரேஷ் மாநில பொது செயலாளர் புரசைகீதா,தென் சென்னை மாவட்ட தலைவர் சிவக்குமார், தென் சென்னை மாவட்ட செயலாளர் விக்னேஸ்வரன், மாநில செயலாளர் ஜோசப் சின்னா, வேளச்சேரி கார்த்திக்,பெரம்பூர் தொகுதி தலைவர் தேவேந்திரன்,மாநில செயலாளர் கவிஞர் லைலா மற்றும் துணைத்தலைவர்கள் டெக்ஸ்டர்ஆல்,வேளாங்கண்ணி, ஜுலியட், மேகலா, இளை ஆகியோர் கலந்து கொண்டனர்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி