காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான சண்டையில் தமிழக வீரமரணம்

காஷ்மீர் மாநிலத்தில் இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த சத்துரஞ்ஜெயபுரம் கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் சக்திவேல், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் வீரச்சாவு அடைந்தார்.

தாய்நாட்டைக் காக்கும் பணியில் பயங்கரவாதிகளுடன் துணிச்சலாக சண்டையிட்டு உயிரிழந்துள்ளார்.

உயிர்த்தியாகம் செய்துள்ள வீரரின் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு அவரது குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் நிதி உதவியை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

Check Also

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்மை தரும் ஆண்டாய்,வளம் தரும் ஆண்டாய் 2026 அமைந்திட அனைத்து நல் உள்ளங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! போலீஸ் …