தமிழகமெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருகின்ற சூழலில் சென்னை, செங்கல்பட்டு,திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மக்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ளாமல் உலா வந்துக் கொண்டிருக்க, இவர்களது நலனில் அக்கறை கொண்ட நமது அரசு, முழு ஊரடங்கு கொண்டு வரும் பட்சத்தில் நோயின் தாக்கத்தை ஒரளவு கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதை உணர்ந்துதான் கடந்த 19 ந்தேதி முதல் வருகின்ற 30 ந்தேதி வரை “சில” தளர்வுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதில் 21 மற்றும் 28 ந்தேதிகளில் மட்டும் முழுமையான ஊரடங்கினை மக்கள் அனுசரிக்க வேண்டும் என அரசு விடுத்த வேண்டுகோளை மக்கள் கடைப்பிடிக்க தொடங்கி உள்ளனர்.
கண்ணுக்கு தெரியாத இந்த வைரஸ், எந்த வித அறிகுறியும் இல்லாமல் பரவுதால் தான் நாம் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என மருத்துவத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இந்த வகையில் மக்களின் உற்ற தோழர்களாக மருத்துவர்கள், சுகாதாரத்துறை இவர்களோடு இணைந்து களப்பணியில் அரும்பாட்டு வரும் நமது தமிழக காவல்துறையினரின் பணி அபரிதமானது.
இந்த வைரஸ் ஒழிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக தான் காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தங்களது நடவடிக்கையில் எந்த உள் நோக்கமும் இல்லை என சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் திரு. ஏ.கே. விஸ்வநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் சில இடங்களில் பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்கள் ஏதேனும் சிரமத்துக்கு ஆளாகி இருந்தால் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கும்பட்சம் பிரச்சினை உடனடியாக தீர்த்துவைக்கப்படும் என கூறியுள்ளது பாராட்டத்தக்கது.
எனவே இத் தருணத்தில் காவல்துறையினருக்கு நாம் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அப்படி தந்தால்தான் கொரோனா எனும் கண்ணுக்கு தெரியாத அரக்கனை அழிக்க முடியும் என்பதில் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இன்றைய ” விழிப்பு” நாளைய ” செழிப்பு” என்பது தான் கொரோனா நமக்கு தந்த பாடம்.
விழித்திருப்போம்…
துரத்திடுவோம்…
நம் நலம் காத்திடுவோம்…
என்றும் உங்களுடன்…
” நட்பின் மகுடம்”
திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன்
(8248552761)
மாநில தவைவர்,
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்
முதன்மை ஆசிரியர்,
ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ்
தலைவர், ஜீனியஸ் டீவி
மாநில அமைப்புச் செயலாளர்,
தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்