சார்க் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேபாளம் சென்றடைந்தார்.
பிரதமர் நரேந்திரமோடி தனி விமானம் மூலம் காத்மாண்டு சென்றடைந்தார்.காத்மாண்டு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.நேபாளம் தலைநகர் காட்மண்டில், 36 வது சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான், பூடான், இலங்கை, அப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் முக்கிய தலைவர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர்.
தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு, நேபாளம் தலைநகர் காட்மாண்டு 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. மாநாட்டிற்கு முன்னர் நடைபெற்ற தெற்காசிய நாடுகள் கூட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றனர். தெற்காசிய கூட்டமைப்பு மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய சாலை சந்திப்புகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.