கோயம்பேடு மார்க்கெட்
கோயம்பேடு மார்க்கெட், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாளை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் அனைத்து வியாபாரிகளும் வாக்களிக்க ஏதுவாக, நாளை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
வியாபாரிகள் அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவின்படி ஓட்டு போட வசதியாக நாளை மார்க்கெட் மூடப்படுகிறது. நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மார்க்கெட் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகள் மூடப்படும்
திரையரங்கு உரிமையாளர் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் அறிவித்துள்ளதாவது:
தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை மாலை 6 மணி வரை திரையரங்குகள் மூடப்படவுள்ளன. தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோளை ஏற்று திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். நாளை மாலை 6 மணிக்கு மேல் படங்கள் திரையிடப்படும் எனவும் ராமநாதன் தகவல் தெரிவித்தார். ஓட்டுப்பதிவின் போது திரையரங்குகள் மூடப்படுவது இதுவே முதல் முறை.