போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 25.11.2023, சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் , சென்னை, ஆவடி அடுத்து வீராபுரம் அருகே கொடுவள்ளி கிராமத்தில் அபபோலோ மருத்துவமனை ஜானகி ,நடராஜன் கண் பார்வை ஆராய்ச்சி (ம) மறுவாழ்வு அறக்கட்டளை, சென்னை மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,கிருபாசனம் கிறிஸ்துவ சபை இணைந்து ” மாபெரும் இலவச மருத்துவ முகாம் ” நடைபெற்றது.
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தகவல் தொழில்நுட்ப அணி தலைவரும், திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் பொறுப்பாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பு செய்தியாளருமான திரு. S. ஜெயக்குமார், திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தலைவர் திரு. M உதயகுமார் தலைமையில்,
இம் முகாமினை சிறப்பு அழைப்பாளர்களாக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் , திரு. PMJF Lion N.R.D. பிரேம்குமார் B.Sc., MBA., ( செயலாளர், அன்னை வைலட் கலைக் கல்லூரி) , திரு. Lion R. தமிழ்அழகன் ( தலைவர், இராயபுரம் ஹெரிடேஜ் அரிமா சங்கம்) ஆகியோர் இணைந்து முகாமினை துவக்கி வைத்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக திருமதி சித்ரா குமார் (கோடுவள்ளி ஊராட்சி மன்ற தலைவர்) திரு. சரத்குமார் ( கோடுவள்ளி ஊராட்சி மன்ற துணை தலைவர்) திரு. ரமேஷ் (கோடுவள்ளி ஊராட்சி மன்ற 4 வது வார்டு உறுப்பினர்) ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இம் முகாமில் 300 க்கு மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டு மருத்துவ பலன்களை (பொது மருத்துவம், கண், பல் அஃகு பஞ்சர் உள்ளடங்கியது) பெற்றனர்.
இம் முகாமில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில கண்காணிப்பு குழு தலைவரும், மெட்ரோமேன் மாத இதழின் நிறுவனர் & ஆசிரியருமான திரு. Sஅன்பு, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் உதவி மக்கள் தொடர்பு அதிகாரியும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி உதவி நிர்வாக ஆசிரியருமான திரு. P.K. மோகனசுந்தரம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில இளைஞரணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் ம்த இதழ், ஜீனியஸ் டீவி துணை ஆசிரியருமான திரு. L. வேலாயுதம், திரு.Lion ரத்தினம் ( இராயபுரம் ஹெரிடேஜ் அரிமா சங்கம்) திருவள்ளூர் மேற்கு மாவட்டம் நிர்வாகிகளான திரு. விஜயகுமார் (செயலாளர்), திரு. பிரபாகரன் ( இணை செயலாளர், திரு. சரவணன் (துணை செயலாளர்) திரு. மணி ( துணை செயலாளர்) )
திரு. ஜோஷ்வ(தகவல் தொழில்நுட்ப அணி) திரு. ஹரிஜான் ( மாவட்ட இளைஞரணி) திரு. வேலாயுதம் (உறுப்பினர்) திரு. T. சுரேஷ் ( உறுப்பினர்) மற்றும் மூன்று சகோதரிகள் (Volunteer’s)கலந்துக் கொண்டனர். இந் நிகழ்ச்சியினை எவ்வித இடையூறுமின்றி அவ்வபோது பயம் காட்டிய வருணபகவானை பொருட்படுத்தாது மக்களுக்கான உதவியினை சூரிய பகவானின் துணையுடன் வெற்றிக்கரமாக சிறப்பாக செய்து முடித்த உழைப்பினை தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி