ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் மசோதாவை ஜப்பான் நிறைவேற்றியிருப்பது பிராந்திய ஒற்றுமையைக் குலைக்கும் செயல் என சீனா கருத்து தெரிவித்துள்ளது.
ஜப்பான் நாட்டு ராணுவத்தை நாட்டுக்கு வெளியேயும் பயன்படுத்தும் வகையில் அந்நாட்டு அரசமைப்புச் சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தயாயு மற்றும் செனகாகு தீவுகளுக்கு இருநாடுகளும் உரிமை கொண்டாடி வரும் நிலையில் சீனாவின் கிழக்குக் கடல் எல்லையில் அடிக்கடி பதற்றம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
இது போன்ற ஒரு சூழ்நிலையில் ஜப்பான், ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்திருப்பது இப்பிராந்தியத்தில் நிலவும் அமைதியைக் குலைக்கும் செயல் என சீனா தெரிவித்துள்ளது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி