‘வாசகர்களின் பேராதரவோடு, வித்தியாசமான வகையில் மாத இதழை கொண்டு வருவது இன்றைய காலக்கட்டத்தில் எவ்வளவு சிரமம் என்பது அத்துறையை சார்ந்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அந்த வகையில் 60 மாதங்கள் என 5 வருடங்களை கடந்து ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும். ‘ஜினியஸ் ரிப்போர்ட்டர்’ தமிழ் மாத இதழக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் நடத்துகிறோம். வந்து பாருங்க.. என விடுத்த அழைப்பினை ஏற்று நாம் விழா அரங்கான இராஜா அண்ணாமலை மன்றம் சென்றோம்.
ஆசிரியர் குழுவின் ஆரவாரமான வரவேற்பில் அரங்கம் நிரம்பி வழிந்தது. என்னதான் செய்யப் போறாங்க என்று எண்ணி சீட்டில் அமர்ந்தால், சுமார் ஒன்றரை மணிநேரம் இடைவிடாத இசைவெள்ளத்தில்.(எம்.கே.டி.ராஜாவின் தீம்திரனா.) நம் கைகள் தாளமிட ‘‘டண்டணக்கா.. நக்கா…’’ போட வைத்தது.
இடையில் செல்வி.சாய்நிலா நடனமும் சிலிர்க்க வைத்தது. இசை வெள்ளத்தில் கண்களையும், உடலையும் உற்சாகமூட்டியபின் பல்வேறு துறைகளில் இருந்து.. அதாவது சிறந்த தொழில் நிறுவனங்கள், சிறந்த தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் என தேர்ந்தெடுத்தது மட்டுமில்லாது சிறந்த ஜீனியஸ் விருதினை வழங்கி கௌரவப்படுத்தினர்.
அதுவும் எப்படி PPFA மாநில பொதுச்செயலாளர் லயன்.றி. பாலகிருஷ்ணன் வரவேற்புரையுடன் மாண்புமிகு நீதியரசர் ஜி.வள்ளிநாயகம், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி.K.கணேஷ், TUJ வின் மாநில தலைவர் DSR.சுபாஷ், அரிமா மாவட்ட ஆளுநர் KS.கண்ணன், PPFA புரவலர் பாசமிகு சகோதரன் இராயபுரம் சு.சேகர், ஆய்வாளர் கண்ணகி, மார்ட்டின் கென்னடி, ஸி.சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்கள்.
சிறந்த தொழில் நிறுவனர்கள் பிரிவில் ஆல்வின் கார்கோ, தணிகை வேல்முருகன் டிராவல்ஸ், விஜய் கணேஷ் ரோலிங் ஷட்டர்ஸ், எம்.எம்.இண்டஸ்ட்ரியல், ஸ்ரீஹரிஹரன் டிரான்ஸ்போர்ட், பாரத் பவுண்டரி (சி. சரவணன்), ஸ்ரீசாந்தி சாரீஸ், திருமலா ஷிப்பிங் சர்வீஸஸ், சிறந்த சமூக சேவகர்களுக்கான பிரிவில் திரு. விழுப்புரம். கி.ரவிச்சந்திரன், திருவெற்றியூர் PV.பாபு. திரு. வி.பழனி, திரு. ஸி.சத்திய நாரயணன், சிறந்த தொழிலதிபருக்கான பிரிவில் திரு.வி.சிவப்பிரகாசம், Ln. T.மனோகரன், திரு.நி.வைரமணி, திரு.Ln. S.சேகர், சிறப்பு ஜீனியஸ் விருதினை Ln. T.ராஜலிங்கம், புலவர் கா.ஆனந்தன், ‘நடனமங்கை’ K.சாய்நிலா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இதில் கூடுதல் சிறப்பு என்னவெனில் ஒவ்வொருவரும் மேடை ஏறிவந்து விருது பெற்றபோது அவர்களை பற்றிய குறிப்புகளை செல்வி.சேமசித்ரா, திருமதி.சங்கரி ஆகியோர் தங்களது ‘கணீர்’குரலால் வழங்கினார்கள்.
விழா நாயகர்களான ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் லயன். B..வெங்கடேசன், இணை ஆசிரியர் லயன். L.பரமேஸ்வரன் மேடைக்கு வரும்போது அவர்களை கவுரவிக்கும் வண்ணம் வணண ரோஜா பூக்களால் வரவேற்க, அதே பூக்கள் மழையில் விருந்தினர்களும் நனைந்து மகிழ்ந்தனர்.
இந்த கோலாகல விழாவினை ஆசிரியர் குழு, PPFA மாநில மாவட்ட மகளிர் நிர்வாக குழு இணைந்து சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.