தண்ணீர் தொட்டியில் குளிக்க சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலி!!!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அகரம் சேரி பகுதியைச் சேர்ந்த தமிழரசன் வயது 16 குடியாத்தம் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தான்.

இதனிடையே இன்று காலை பள்ளிக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து குடியாத்தம் அருகே உள்ள ராஜா கோவில் பகுதியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள தண்ணீர் தொட்டி குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

அங்கு நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த தமிழரசன் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தான். மேலும் இது குறித்து அக்கம் பக்கத்தினர் குடியாத்தம் நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி மாணவன் தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Check Also

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்மை தரும் ஆண்டாய்,வளம் தரும் ஆண்டாய் 2026 அமைந்திட அனைத்து நல் உள்ளங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! போலீஸ் …