நடிகர் சங்கத்தை விட்டு நீக்கினால் எனக்கு கவலையில்லை என்று தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.
நடிகர் சங்கத்துக்கு எதிரான அவதூறு பேச்சுகளை நிறுத்தாவிட்டால் நடிகர் விஷால் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார் என திருச்சியில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில், நடிகர் விஷால் புதன்கிழமை அனுப்பிய செய்தியில்
நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்படுவேன் என்ற செய்தி என்னை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்தச் செய்தி எனது சினிமா வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
நடிகர் சங்கத்தின் மீது மதிப்பு வைத்திருப்பவன் நான். நடிகர் சங்க நிர்வாகிகளான ராதாரவி, கே.என்.காளை ஆகியோர் என்னைப் பற்றி அவதூறாகப் பேசியுள்ளனர். அதற்கு விளக்கம் கேட்பது தவறா? கேள்வி கேட்பது தவறா?. என்னை சங்கத்தை விட்டு நீக்கினால் கவலையில்லை. ஆனால் என்னைப் பற்றி பேசிய அவதூறு பேச்சுகளுக்கு விளக்கம் அளிக்கவேண்டும் என அதில் தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி