ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுகவின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் சகோதரி திருமதி பவித்ரவள்ளியை ஆதரித்து தாராபுரம் பொது கூட்டத்தில் பேசிய போது:
அதிமுக அமைச்சர்கள், வேட்பாளர்கள் ஆகியோர் எங்கும் சென்று பேச முடியவில்லை, ஒட்டு கேட்க முடியவில்லை. எல்லா இடங்களிலும் பொதுமக்களால் விரட்டி அடிக்கப்படுகின்றனர். பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை. அதிமுக அளித்த வாக்குறுதிகள், உறுதிமொழிகள் என்ன ஆனது என்று மக்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு விரட்டி அடிக்கின்றனர்.
நேற்று கூட அதிமுக வில் ஜெயலலிதாவுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ள நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அவரது சொந்த தொகுதியிலேயே விரட்டி அடித்து உள்ளனர். இவற்றில் இருந்து தெரிய வருவது என்னவென்றால், இந்த தேர்தலில் மத்திய ஆட்சி என்பது ஒருபுறம் இருக்கட்டும், தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டனர் என்பது உறுதியாகி உள்ளது.
ஆனால் திமுக கூட்டணியில், ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் உள்ள வேட்பாளர்கள் தெம்போடு, உரிமையோடு, உணர்வோடு உங்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கிறோம். என்று தேர்தல் பரப்புரை செய்தார்