நைஜீரியா தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்

நைஜீரியாவில் ஒரு பள்ளியில் நேற்று தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 48 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள கண்டன செய்தியில் இது போன்ற வன்முறை தாக்குதல்கள் கோழைத்தனமான செயல், பலியோனோர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன் என தெரிவித்துள்ளார். தற்கொலை தாக்குதல் படையைச் சேர்த ஒருவர் பள்ளிச் சீருடையில் வெடி குண்டுகளுடன் நுழைந்த பள்ளிக்குள் நுழைந்து வெடி குண்டை வெடிக்கச் செய்துள்ளான். போகோ ஹாரம் பயங்கரவாத குழுவைச் சேர்தவராக இருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

ஹஜ் விபத்து: இந்தியர்களின் பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு

ஹஜ் புனித பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. சவுதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *