சென்னையில் புயல் பாதிப்பால் மழை ஓய்ந்தாலும் இன்னும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் சில பகுதிகளில் வடியாமலும், வாழ்வாதாரம் பாதித்துள்ள நிலையிலும் மக்கள் உள்ளனர்.
அந்த வகையில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் (PPFA) சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை, வியாசர்பாடி, கணேசபுரம் மக்களுக்காக (சுமார் 200 நபர்களுக்கான உணவு) மதிய உணவினை 22.11.2021 திங்கட்கிழமை, மதியம் 1 மணியளவில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளருமான “நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி பரமேஸ்வரன் அவர்களது நேரடி தலைமையில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில செயற்குழு உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் 40 வட்ட செயலாளருமான திரு. M.A. ராஜசேகர், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பாசிரியரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் வடசென்னை மாவட்ட துணை செயலாளருமான “கிங்மேக்கர்” திரு. Ln B. செல்வம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில இளைஞரணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி துணை ஆசிரியருமான திரு. L. வேலாயுதம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில ஒருங்கிணைப்பாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி செய்தியாளருமான திரு. A M. ரஷீத் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாக்கம்:
“ஜீனியஸ்” K. சங்கர்