வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் நகர் ராணுவ வீரர் சாலையில் அமைந்துள்ள சபை போதகரும், போலீஸ் பப்ளிக் ப்ரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் மாவட்ட செயல் தலைவரும், செய்தியாளருமான திரு. சி. பலராமன் அவர்களின் தாயார் திருமதி.பூஷ ணம் சாராள் வயது (83) கடந்த சில மாதங்களாக உடல் நலிவுற்று கடந்த 16-11-2023 வியாழக்கிழமை 3- 40 மணியளவில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
தாயாரின் 21 ஆம் நாள் ஆறுதல் பிரார்த்தனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஏலீம் திருச்சபையின் தலைமை போதகர் டாக்டர் பிஷப். ஜி.கிளாரன்ஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு திருவுருவப்படத்தை திறந்து வைத்தார்.
SPC வேலூர் மாவட்ட செயலாளர். Rev. ஸ்டான்லி ஜோன்ஸ் அவர்கள் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பிறகு பிஷப் அவர்கள் இறைச் செய்தி கொடுத்து குடும்பத்தை ஆறுதல் படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கொத்த குப்பம் திருச்சபையின் போதகர் Rev. யாபேஸ் ஜான் வெஸ்லி, Rev. எலியேசர், Rev. சாத்ராக் முருகேசன்,Rev. ஸ்டான்லி குமார், பாஸ்டர். முத்தமிழன், செய்தியாளர். கே.
அறிவழகன், மேலாளத்தூர் திமுக கிளை செயலாளர். சுதாகர், மற்றும் கொத்த குப்பம் டாக்டர் அம்பேத்கர் நற்பணி மன்றத்தில் வாலிப பிள்ளைகளும் மற்றும் ஏராளமான ஊர் பொதுமக்களும் இந்த ஆறுதல் ஜெப கூட்டத்தில் பங்கு பெற்றனர். இறுதியாக நன்றி உரை பாஸ்டர். சி. பலராமன் கூறினார்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி


