சென்னை நகரம் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வரும் நிலையில், மெட்ரோ ரயில் வருகை ஒரளவு நெரிசலை குறைத்ததோ இல்லையோ சரியான நேரத்தில் துரிதமாக நெரிசல் இல்லாமல் பயணம் என்பதால், கோயம்பேடு முதல் மீனம்பாக்கம் வரை ஆரம்பமானது.
இதன் தொடர்ச்சியாக திருவொற்றியூர் விம்கோ நகர் வரை எல்லை நீண்டது. பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், மாதவரம் முதல் சிறுசேரி வரை இதன் விரிவாக்க விரிவடைந்த நிவையில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந் நிலையில் கோயம்பேடு முதல் ஆவடி வரை இதனை பட்டாபிராம் வரைக்கும் நீடிக்கும் வகையில் திட்ட வரைவுகளை சென்னை மெட்ரோ நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
அவ்வகையில் இத் தடத்தில் கோயமாபேடு துவங்கி திருமங்கலம் , முகப்பேர், பாடி புது நகர், பார்க் சாலை, கோல்டன் பிளாட்ஸ், வாவின், அம்பத்தூர் எஸ்டேட், அம்பத்தூர் தொலைபேசி நிலையம், டன்லப், அம்பத்தூர் ஓ.டி., செட்போர்டு மருத்துவமனை, திருமுல்லைவாயில், வைஷ்ணவி நகர், முருகப்பா பாலிடெக்னிக், ஆவடி ரயில் நிலையம், பட்டாபிராம் ரயில் நிலையம் என அமைய உள்ளது.
இதில் வெளி வட்டம், சுரங்கத்தில் அமைய உள்ள நிலையங்களின் பற்றிய இறுதி வரைவுக்கு பிறகு வெளியாகும் என தெரிகிறது. ஆக இத்தடம் அமைய போது, அலுவலக, பள்ளி நேரங்களில் நெரிசலால் அவதியுறும் இப் பகுதி வாழ் மக்களின் மாபெரும் வரப்பிரசாதமாக அமையும் என்பதில் ஐயமில்லை.