போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் 15 ஆம் ஆண்டில் அடியெடுத்து தன் பணியில் செவ்வனே செயல்பட்டு வரும் வேளையில், புதிய மாவட்டமாக வேலூர் கிழக்கு மாவட்டம் உதயமானது.
இம் மாவட்ட தலைவராக திரு. C. பலராமன், துணை தலைவராக திரு. K. அறிவழகன், இணை செயலாளராக திரு. P. முத்தமிழன் ஆகியோர் பொறுப்பேற்ற எளிய விழா , நமது தலைமை அலுவலகத்தில்( சென்னை, இராயபுரம்) இன்று 5.10.2023, காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், சீர்மிகு தலைவரும், ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களை சந்தித்து, பொன்னாடை அணிவித்து பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வின் போது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில இளைஞரணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி துணை ஆசிரியருமான திரு. L. வேலாயுதம்,
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தொழில்நுட்ப அணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி செய்தியாளருமான திரு. S. ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இச் சந்திப்பின் போது புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகிகளுக்கு நமது சங்கத்தின் வழிமுறைகள், செயல் திட்டங்களை விளக்கமாக மாநில தலைவர் எடுத்துரைத்தார். இனி வருங்காலக்கட்டங்களில் தங்களது வேலூர் கிழக்கு மாவட்டத்தில் சங்த்தின் வளர்ச்சிக்கும், சிறப்பாக செயல்படக்கூடியவர்களை இணைத்து மாநில தலைமையின் வழிக்காட்டுதலான்படி செயல்பட இருப்பதாக வேலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி

