கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கினால் பசியால் தவித்து வருகின்ற சாலையோர மக்களின் பசியினை போக்கிடும் வண்ணம் தினசரி அவர்களுக்கான மதிய உணவு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்(PPFA) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
07-04-2020, செவ்வாய்க்கிழமை, மதியம் 12.30 மணியளவில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்(PPFA) வின் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு.MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் மற்றும் இராயபுரம் முனைவர் சு. சேகர் ஆகியோரது தலைமையில் காசிமேடு, இந்திரா நகர் குடிசைமாற்று வாரிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு நேரடியாக சென்று உணவளித்தனர்.
இவர்களுடன் PPFA வின் மாநில இணை செயலாளர் திரு. Ln A.G அசோக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் திரு. MJF Ln Dr M. நாகராஜன், மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. A.M. ரஷீத், வடசென்னை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் திரு. G. பாலாஜி ஆகியோர் உடன் இணைந்து களப்பணிசெய்தனர்.
மேலும் தொடர்ந்து பங்களிப்பினை அளித்து வரும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும், களப்பணியில் இணைந்து செயலாற்றி வருகின்றவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
செய்தியாக்கம்: ” ஜீனியஸ்”. K. சங்கர்
ஒளிப்பதிவு: G. பாலாஜி
படத்தொகுப்பு& மேற்பார்வை: அமுரா.