தேர்தல் வாக்கு கேட்டு உங்கள் தொகுதிக்கு ப. சிதம்பரம் வந்தால் அவரை செருப்பால் அடியுங்கள் என்று மக்களிடம் தெரிவித்த அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 2014ல் சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். அவர் மானாமதுரை அருகே நேற்று மாலை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வாக்கு கேட்டு உங்கள் பகுதிக்கு வந்தால் அவரை துடைப்பத்தாலும், செருப்பாலும் அடியுங்கள் என்று கூறியுள்ளார்.
அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் சிலர் அங்கு வந்துள்ளனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் இன்று கூட்டமாக வந்து போலீசில் செந்தில்நாதன் மீது புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இது குறித்து தேர்தல் அலுவலரிடம் தெரிவித்து வழக்குப் பதிவு செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி