திருவள்ளூர் மாவட்டத்தில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் மஞ்சள்காமாலை, கல்லீரலில் புற்றுநோய்காண!!!

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுகுமார் M A. B L அவர்களின் தலைமையில், திருவள்ளூர் மேற்கு மேற்கு மாவட்டத்துடன், Rotary Club of Chennai Towers,Chennai Livet Foundation ,Jenefa Health Human Education Trust, இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் 26.10.2024, சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை , பட்டாபிராம், Jenefa Health Education Trust வளாகத்தில் நடைபெற்றது.

இம் முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில இணை செயலாளரும் லயன்ஸ் கிளப் ஆஃப் இராயபுரம் ஹெரிடேஜ் செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” MJF Lion Dr லி. பரமேஸ்வரன் , லயன்ஸ் கிளப் ஆஃப் இராயபுரம் ஹெரிடேஜ் தலைவர் ” விஸ்வசக்தி”  Lion
C. மனோகர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இம் முகாமில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளரும், மாநில தொழில்நுட்ப அணி தலைவரும் , ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பு செய்தியாளருமான  ஜெயக்குமார், ஆவடி தொகுதி தலைவர் சரவணன், அம்பத்தூர் தொகுதி தலைவர் மணி ஆகியோருடன் நிர்வாகிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

இம் மருத்துவ முகாமில் மஞ்சள்காமாலை, கல்லீரலில் புற்றுநோய் உண்டாகக்கூடிய பாக்டீரியாக்களை கண்டறிந்து அதற்கான சிகிச்சையும், இரத்த சக்கரையின் அளவு, இரத்த அழுத்தம் இவற்றுடன் ஈசிஜி சிகிச்சையும் அளிக்கப்பட்டன. சுமார் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதனால் பயன்பெற்றனர்.

Check Also

PPFA திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சார்பாக நல திட்ட உதவி

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில், 05.10.2024, சனிக்கிழமையன்று , காலை 11 மணியளவில், திருவள்ளூர் …