போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக, மாநில தலைவர் அவர்களது பிறந்த நாளை கெளரவிக்கும் விதமாக மாபெரும் யுனானி மருத்துவ முகாம் பிறக்கும் புதிய ஆண்டான 2025 ல் முதல் நாளில் ( 01.01.2025) புதன்கிழமையன்று, அரசு யுனானி மருத்துவர் குழுவுடன் இணைந்து , சென்னை, மணலி, மாத்தூர், எம் எம் டி ஏ மூன்றாவது மெயின் ரோடு, அல் மஸ்துல் அக்ஸா பள்ளி வாசலில், காலை 9.30 மணி முதல் , மாவட்ட தலைவர் S. இதயாதுல்லா தலைமையில், மாவட்ட செயலாளர் A. செய்யது சுலைமான் , மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இம் முகாமில் சிறப்பு அழைப்பாளராக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஸஷன் மாநில தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில இணை செயலாளரும், இராயபுரம் ஹெரிடேஜ் அரிமா சங்கத்தின் செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்.
இதனை தொடர்ந்து நமது சங்கத்தின் கொடியினை( மாவட்ட அலுவலகம் அருகில்) ஏற்றி சிறப்பித்தது குறிப்பிடதக்கது.
இம் முகாமில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி




