மியன்மாரின் முக்கிய இராணுவ பிரமுகர்களையும் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூய் உள்ளிட்ட அரசியல்வாதிகளையும் அழைத்து அதிபர் தெயின் செயின் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பர்மா என்றும் அழைக்கப்படும் மியன்மாரின் மூத்த இராணுவ ஜெனரல் இந்த பேச்சுவார்த்தையில் பங்கெடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா மியன்மாருக்கு விஜயம் மேற்கொள்வதற்கு சில வாரங்கள் உள்ள நிலையில், இந்த அவசரக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
மியன்மாரில் அடுத்த ஆண்டுபொதுத் தேர்தல் நடக்கவுள்ளது.
அதற்கு முன்னதாக மியன்மாரின் சர்ச்சைக்குரிய அரசியல், இராணுவ மற்றும் இன ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக அரசியல் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர்.