சேலம் அருகே பூரண மதுவிலக்கு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சசிபெருமாள் குடும்பத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர். அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
பூரண மது விலக்கு குறித்த அறிவிப்பை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே வெளியிட வலியுறுத்தி மறைந்த காந்திய வாதி சசிபெருமாள் குடும்பத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டமன்ற கூட்ட தொடர் முடியும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். சேலம் மாவட்டம் சித்தர் கோவில் காந்தி சிலை அருகே இன்று காலை முதல் சசிபெருமாளின் மகன்கள் உட்பட 6 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி