‘விஸ்வரூபம் 2’ படம் வெளியாவதில் தாமதம் ஏன் என்பதற்கு நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
‘விஸ்வரூபம்’ வெளியான உடனே, ‘விஸ்வரூபம் 2’ படத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளுக்கு படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது ‘விஸ்வரூபம் 2’ படத்தின் உரிமையை வாங்கினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
அதனைத் தொடர்ந்து ‘விஸ்வரூபம் 2’ எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தெரிந்தது. அப்படம் வெளியாவதற்குள் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ‘உத்தம வில்லன்’, ஜூது ஜோசப் இயக்கத்தில் ‘பாபநாசம்’ என இரண்டு படங்களை முடித்து விட்டார் கமல்.
மூன்று படங்களுமே எப்போதும் வெளியாகும் என்ற கேள்விக்கு கமல் கூறியிருப்பது, ” ‘விஸ்வரூபம்’ முதல் பாகத்திற்கு நேர்ந்த பிரச்சினையைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் குறித்து நான் கவலையடைந்தேன். எனவே அதன் வெளியீட்டிற்கு காத்திராமல், லிங்குசாமியோடு பேசியவுடன் ‘உத்தமவில்லன்’ படத்தை துவக்கினோம். ‘பாபாநாசம்’ கதை சுவாரசியமாக இருந்ததால் அதையும் ஒப்புக்கொண்டேன். தற்போது இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டன.
‘விஸ்வரூபம் 2’-ன் படப்பிடிப்பு, ஒரு பாடலைத் தவிர, போன வருடம் அக்டோபர் மாதமே முடிந்துவிட்டது. தயாரிப்புப் பணிகள் தாமதமாவதால் இன்னும் காத்திருக்கவேண்டியுள்ளது. ஒரு படம் துவங்கும் முன் எவ்வளவு பூஜைகள் வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் அப்படத்தின் விதியை எந்த அமானுஷ்ய சக்தியும் தீர்மானிப்பதில்லை” என்று கூறியுள்ளார்