வேலூர் மாவட்ட மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வேலூர் மாவட்டம் குடியாத்தம் படித்த பெண்கள் சுயதொழில் தொடங்கி பலருக்கு வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும் என்று டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலை தலைவர் டாக்டர் ஏசி சண்முகம் கூறினார் குடியாத்தம் அடுத்த கீழ் ஆலத்தூரில் உள்ள ஸ்ரீ அபிராமி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது

பட்டமளிப்பு விழாவில் 780 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அவர் பேசினார் பாரதி கண்ட கனவு மெய்ப்படும் வகையில் கல்வி வாழ்க்கை பொருளாதாரம் மற்றும் நிர்வாகத்தில் பெண்கள் உயர்ந்து வருகிறார்கள் விண்வெளி ஆராய்ச்சி சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கு கேற்பு என்ன பெண்கள் சாதனை படைத்து வருகிறார்கள்

உயர்கல்வியை முடித்த பெண்கள் தங்களுக்கு வசதிக்கேற்ப கணவர் சம்பாதிக்கிறார் எனவே வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று என்னக் கூடாது இன்றைய சூழலில் வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் பெண்களின் பங்கேற்பு அவசியமாக உள்ளது

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்பது இன்று நிதர்சனமான உண்மை வசதி படைத்த பெண்களாகஇருந்தாலும் வேலைக்கு செல்ல விருப்பம் இல்லாவிட்டாலும் பெற்றோரின் ஆலோசனையில் பேரில் தன்னுடன் படித்த பெண்களுடன் இணைந்து சுய தொழில் தொடங்கி மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும்

சொந்த காலில் நிற்பதை பெண்கள் கௌரவமாக கருத வேண்டும் என்றார் விழாவுக்கு கல்லூரி தலைவர் எம் என் ஜோதி குமார் தலைமை வகித்தார் கல்லூரி இயக்குநர் கே ஜோதிட ராமன் வரவேற்றார் கல்லூரி முதல்வர் வி ஆராவமுதன் நிர்வாக அலுவலர் கே முருகதாஸ் அறங்காவலர்கள் க எதிராசன் எம் பிரகாசம் எம் கோபிநாத் உள்ளிட்டோர் அனைவரும் கலந்து கொண்டார்கள்

Check Also

பேர்ணாம்பட்டு நகரம் ரோட்டரி சங்க தலைவருடன் சந்திப்பு

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்ட செயல் தலைவர் சி பலராமன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வேலூர் …