அமிதாப் பச்சனின் ட்விட்டர் ஹேக் செய்யப்பட்டது

பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

டிவிட்டர் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருபவர்களில் நடிகர் அமிதாப்பச்சனும் ஒருவர். இவரது டிவிட்டர் பக்கத்தினை சுமார் ஒன்றரை கோடி பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இது தொடர்பாக மும்பை போலீசில் அமிதாப் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து அமிதாப்பின் டிவிட்டர் பக்கம் சரி செய்யப்பட்டது.

பின்னர் இந்த சம்பவம் குறித்து தனது டிவிட்டரில் அமிதாப் கூறுகையில், “எனது டிவிட்டரை சிலர் கைப்பற்றி முடக்கினர். அதில் ஆபாச இணைய தளங்களை பரவ விட்டனர். யார் இதை செய்தார்கள், சிலர் முயற்சி செய்து இருக்கிறார்கள், நண்பா! எனக்கு இது தேவையில்லாதது” எனத் தெரிவித்துள்ளார்.

Check Also

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …