டியூஜே நடத்திய குடியரசு தின விழா மற்றும் மகளிருக்கான மருத்துவ முகாம்.

டியூஜே நடத்திய குடியரசு தின விழா, மகளிருக்கான மருத்துவ முகாம், அடையாள அட்டை வழங்கும் விழா இன்று 26-1-19 காலை 10 மணியளவில் மாநில தலைவர் திரு. D S R சுபாஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்ளாக திரைப்பட இயக்குநர் திருமதி. லட்சுமி ராமகிருஷ்ணன், டாக்டர். சி.எம்.கே.ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மருத்துவ முகாமினை துவக்கி வைத்த இயக்குநர் திருமதி. லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களிடம் நமது ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழினை இணை ஆசிரியரும், டியூஜே மாநில அமைப்பு செயலாளருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr. லி. பரமேஸ்வரன் அவர்கள் அளித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் 2019 ஆண்டிற்க்கான டியுஜே அடையாள அட்டையினை டாக்டர் சி.எம். கே. ரெட்டி அவர்களிடமிருந்து நமது இணை ஆசிரியர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Dr Ln. பரமேஸ்வரன் அவர்களும், நமது உதவி நிர்வாக ஆசிரியர் “மின்னல்” திரு. இ. கேசவன் அவர்களும் பெற்றனர்.

நிகழ்ச்சியில் டியுஜே வட சென்னை மாவட்ட துணை தலைவர் திரு. கே. சங்கர், இணை செயலாளார் திரு. எல். வேலாயுதம், செயற்குழு உறுப்பினர்கள் திரு. ஈ. மகேஷ்வரன், திரு. லட்சுமி நாராயணன் மற்றும் ஏராளமான பத்திரிகையாளரகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

டங்கள்:
“ஜீனியஸ்” கே. சங்கர்.

Check Also

ஊரட‌ங்கால் மக்கள் பசிப்பிணியை போக்கும் PPFA..

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக மதிய உணவினை தொடர்ந்து 13 …