டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் பொதுச்செயலருமான 67 வயது திக்விஜய்சிங் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் அம்ரிதா ராய்க்கும் தமக்கும் பழக்கமிருக்கிறது.அவரை திருமணம் செய்ய இருக்கிறேன் என்று அறிவித்துள்ளார்.
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் அம்ரிதாவுக்கும் திக்விஜய்சிங்குக்கும் இடையே நெருக்கமான உறவு இருப்பதாகவும் இது தொடர்பான சில புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக இணையதளங்களில் மற்றும் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
இதனால் திக்விஜய்சிங் தமக்கும் அம்ரிதாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்று தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதுகுறித்து திக் விஜய் சிங்டுவிட்டரில் வெளியிட்டுள்ள குறிப்பில் தனக்கும், அம்ரிதா ராய்க்கும் உள்ள உறவை வெளிப்படையாக அறிவிப்பதில் எனக்கு தயக்கமில்லை என்று தெரிவித்துள்ளார். எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் தலையிட வேண்டாம் என்று கண்டித்துள்ளார்.
இதுகுறித்து அமிர்தா ராய் டுவிட்டரில் கூறியுள்ளதாவது் எனது கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்கிறேன். நாங்கள் இருவரும் கருத்தொருமித்து விவாகரத்து கோரி அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளோம். விவாகாரத்து கிடைத்தபின் திக் விஜய் சிங்கை திருமணம் செய்து கொள்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்..
[jwplayer mediaid=”1567″]
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி