மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுடப்பட்டு விபத்து ஏற்பட்டதாக வந்த செய்தி அறிந்து தாம் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் தெரிவித்திருந்தார். தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து அவர் தெரிவித்தபோது, இந்த விபத்து குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
பின்னர் இது குறித்து தனது பேஸ்புக் வலைத்தளத்தில் அவர் குறிப்பிட்டிருந்த போது,
அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் அழைத்து வருத்தம் தெரிவித்தார். விமான விபத்து குறித்து விசாரணை நடத்த உடனடியாக சர்வதேச குழு, விபத்து நடந்த இடத்துக்கு உடனே சென்றுள்ளது. விமானத்தின் கருப்புப் பெட்டியைக் கண்டறிய, அந்தப் பகுதியை குழு ஆராய்ந்து வருகிறது. இது ஒரு மிக மோசமான நாள், மலேசியாவுக்கு மிக மோசமான வருடமாக இது ஏற்கெனவே அமைந்துவிட்டது. விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்தினர் நண்பர்களுடன் எனது பிரார்த்தனையை முன்வைக்கிறேன். அவர்களின் வருத்தங்களை பகிர்ந்து கொள்கிறேன். என்ன நடந்தது என்பது குறித்து அறிந்தபின்னரே முழுவதும் கூற முடியும். விமானத்தில் பயணித்தவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஆனால் இன்று, தேசங்களைக் கடந்து, இதில் நாம் ஒன்று பட்டு நிற்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
I am shocked by reports that an MH plane crashed. We are launching an immediate investigation.
— Mohd Najib Tun Razak (@NajibRazak) July 17, 2014
விமானத்தில் பயணம் செய்து உயிரிழந்த ஆஸ்திரேலியர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக, அந்நாட்டின் பிரதமர் டோனி அப்போடுக்கு தனது வருத்தத்தைப் பகிர்ந்துக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ள நஜீப் ரஸாக், இந்த நேரத்தில் அவரின் ஒத்துழைப்பைப் பாராட்டுவதாகவும் கூறியுள்ளார்.
I conveyed my condolences to @TonyAbbottMHR on the loss of Australian lives on board #MH17. Appreciate his support for us in trying times.
— Mohd Najib Tun Razak (@NajibRazak) July 18, 2014