சென்னை: நடிகர் அஜீத் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் பேசி மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். அஜீத் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
நடிகர் அஜீத்குமார் வீடு திருவான்மியூரில் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 108 ஆம்புலன்ஸ் சேவை எண்ணுக்கு பேசிய மர்ம ஆசாமி நபர், திருவான்மியூரில் உள்ள அஜீத் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் அது வெடிக்கும் என்று சொல்லி போனை வைத்துவிட்டார். அவர்கள் உடனடியாக இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீசார் அஜீத் வீட்டுக்கு சென்று, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் மூலம் சோதனை செய்தனர். ஒவ்வொரு அறையாக சென்று வெடி குண்டு இருக்கிறதா என்று சோதனை போட்டனர். இறுதியில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது.
எனினும் அஜீத் வீட்டிற்கு பாதுகாப்பு போடபட்டு உள்ளது. 108 நம்பருக்கு பேசி வெடி குண்டு மிரட்டல் விடுத்த நபர் எந்த போன் நம்பரில் இருந்து தொடர்பு கொண்டார் என்று போலீசார் ஆய்வு செய்தனர். அந்த நம்பரை கண்டு பிடித்து விட்டதாகவும் மிரட்டல் விடுத்த நபர் விரைவில் பிடிபடுவார் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி