மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முரளி தியோரா திங்கட்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 77.
சிறிது காலம் உடல்நலமின்றி இருந்த அவர், மும்பையில் தனது இல்லத்தில் காலமானார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், கடந்த வாரம்தான் வீடு திரும்பியிருந்தார்.
நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தேவ்ரா, 2006ல் பெட்ரோலியத் துறை அமைச்சரானார்.
அவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் இருக்கின்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா இவருடைய மகன்களில் ஒருவர்.
அவருடைய மரணத்திற்கு ஒரு நாள் முன்புதான், தியோராவின் குடும்பத்தினருடன் பேசியதாகவும், இந்த துரதிர்ஷ்டவசமான செய்தியைக் கேட்பது வருத்தமளிப்பதாகவும் பிரமதர் நரேந்திர மோதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் பட்டம் பெற்றிருந்த தியோரா, மும்பை தெற்கு தொகுதியிலிருந்து நான்கு முறை வெற்றிபெற்றவர். 1970களில் மும்பையின் மேயராகவும் பணியாற்றினார்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி