தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் உள்ள மிகவும் பிரபலமான இராவன் இந்து ஆலயம் பெரிய குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இதில் குறைந்தது 16 பேர் பலியானதுடன் பலர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சம்பவ இடத்தில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
குண்டு வெடிப்பு காரணமாக பீதியில் ஓடிய மக்கள் கூட்டத்தால், நகரின் முக்கிய சாலைகள் முடங்கியதுடன் அவசர சேவைகளுக்கு பெரிய தடைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு அருகிலுள்ள இந்த இந்து வழிபாட்டுத் தலத்திற்கு, பௌத்த மக்கள் உட்பட தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடமாகும். சுற்றுலாப் பயணிகள் மத்தியிலும் பிரபலமான ஒரு இடமாகவும் அந்த ஆலயம் திகழ்கிறது.
நாட்டின் தென் பகுதியில் பிரிவினை கோரி கிளர்ச்சியில் ஈடுபடும் முஸ்லிம் அமைப்புகள் குண்டு வெடிப்புத் தாக்குதல்களை நடத்தியிருந்தாலும், தலைநகரில் இப்படியான சம்பவங்கள் நடைபெற்றது இல்லை எனவும் அவர் கூறுகிறார்.