சன் குழுமத்தின் ரூ.742 கோடி சொத்துகளை தற்காலிகமாக முடக்கி அமலாக்கப் பிரிவு பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இன்று காலை, ரூ.742 கோடி சொத்துகளை தற்காலிகமாக முடக்கி அமலாக்கப் பிரிவு பிறப்பித்த உத்தரவின் படி தங்களுக்கு எதிராக வேறு எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் இருப்பதை முன் கூட்டியே தவிர்க்கும் வகையில் மாறன் சகோதரர்கள் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “சன் குழுமத்தின் ரூ.742 கோடி சொத்துகளை தற்காலிகமாக முடக்கி அமலாக்கப் பிரிவு பிறப்பித்த உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதிக்கிறது. ஆனால் அதேவேளையில், சொத்து முடக்க உத்தரவை உறுதிப்படுத்துவதற்கான 180 நாள் காலக்கெடு முடிந்த பின்னரும் கூட அமலாக்கப் பிரிவின் உத்தரவு அமலில் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளது.
Tags அமலாக்கத்துறை அரசியல் உச்சநீதி மன்றம் கலாநிதி மாறன் சட்டம் தயாநிதி மாறன்
Check Also
பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…
பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …