காவிரி பிரச்சினையில் கர்நாடக முதல்வரின் நியாயமற்ற பேச்சு கண்டிக்கத்தக்கது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்க மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் அண்மையில் அறிவித்தது கண்டனத்திற்குரியது என கூறியுள்ளார்.
இது விவசாயிகளுக்கு எதிரானது மற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் மாறானது எனவும் கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உடனடியாக காவிரி நடுவர் மன்றத்தை அமைத்து, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிய தண்ணீரை பெற்று தர வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு ஜி.கே.வாசன் வலியுத்தியுள்ளார்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி