28.02.2014, வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் மாநில தலைவர் DSR சுபாஷ் அவர்கள் தலைமையில், செம்மாஞ்சேரி காவல் நிலையம் முன்பு,
நகர்ப்புறங்களில் அரசு விதிமுறைகளை மீறி கேபிள் புதைக்க பள்ளம் தோண்டி அப்பாவிகளின் உயிரைக் குடிக்கத் துடிக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது பொதுநல வழக்கு தொடர்ந்துள்ள மக்கள் போராளி, பத்திரிக்கையாளர் வாராகி அவர்கள் மீது ரிலையன்ஸ் நிறுவனத்திடம் பல லட்சங்களை வாங்கி பொய் வழக்கு போட்டு குற்றவாளிகளுக்கு துணை போன செம்மாஞ்சேரி காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசையும், காவல் துறையையும் வலியுறுத்த மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த முற்றுகைப் போராட்டம் பற்றி டியுஜே வெளியிட்ட அறிக்கையில்,
பத்திரிக்கையாளர் வாராகி மீது பொய் வழக்கு போட்டு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு துணை போன காவல் துறை அதிகாரிகளைக் கண்டித்து தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் (டியூஜே) நடத்திய பிரமாண்ட ஆர்ப்பாட்டம் 28 வெள்ளி காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரில் நடைபெற்றது.
நகர்ப்புறங்களில் அரசு விதிமுறைகளை மீறி கேபிள் புதைக்க பள்ளம் தோண்டி அப்பாவி மக்கள் உயிரைக் குடிக்கத்துடிக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது ஒரு பொது நல வழக்கு பதிவு செய்திருந்தார் இந்தியன் ரிப்போர்ட்டர் ஆசிரியர் வாராகி அவர்கள்.
ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக பல லட்சங்களை லஞ்சமாக பெற்றுக்கொண்டு வாராகி மீது பொய் வழக்கு போட்டுள்ள செம்மஞ்சேரி காவல் ஆய்வாளர் சிவகுமார் மற்றும் உதவி ஆய்வாளர் சங்கரநாராயணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் அமைப்பின் சார்பாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கோரப்பட்டது. கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது மட்டுமின்றி பல்வேறு வகைகளில் பத்திரிக்கையாளர்களுக்கும், அமைப்பாளர்களுக்கும் ரிலையன்ஸ் குழுவினரால் தடைகள் விதிக்கப்பட்டது. அதற்கு காவல் துறையும் உடந்தையாக இருந்தது. மாநிலத் தலைவர் டியுஜே. சுபாஷ் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களால் செம்மஞ்சேரி காவல் நிலையம் முற்றுகையிடப்பட்டது.
இதில் நாட்டை நூதன முறையில் கொள்ளையடிக்கும் ரிலையன்ஸ் போன்ற .நிறுவனங்களுக்கு கைக்கூலியாக செயல்படுவதுடன் சமூக நலனுக்காக போராடும் பத்திரிக்கையாளர் வாராகி அவர்கள் மீது பொய் வழக்குப் போடும் காவல் துறையை கண்டித்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்யவும் விதிமுறைகளை மீறி செயல்படும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் வாராகி மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெறவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நட்த்தப்பட்டது.
இதனால் காவல் துறையினர் அனைவரையும் கைது செய்தனர். மாநிலத் தலைவர் டியுஜே. சுபாஷ், இந்தியன் ரிப்போர்ட்டர் ஆசிரியர் வாராகி, அம்பேத்கார் ஜனசக்தி மாநிலத் தலைவர் விஸ்வநாத், நெப்போலியன், கழுகு கே. ராஜேந்திரன், த. அல்லா பகேஷ், இந்தியன் ரிப்போர்ட்டர் புவன், மக்கள் ராஜ பார்வை ஹரிகிருஷ்ணன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர்களான நெற்றிக்கண் மனோகரன், கேப்டன் டிவி ராபர்ட், தாய் டிவி பிரபாகர் உட்பட 200 க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
அப்போது பேசிய மாநிலத்தலைவர் “தமிழகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது என்றும் பத்திரிக்கையாளர்களுக்கு பணி பாதுகாப்பு மட்டுமின்றி உயிர் பாதுகாப்பு கூட இல்லாத நிலை உள்ளது என்றும் இதே போன்ற அவல நிலை நீடித்தால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பத்திரிக்கையாளர்களையும் திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என்று தமிழக அரசையும் காவல் துறையினரையும் எச்சரித்து பேசினார். 200 க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களை கைது செய்த செய்தி ஊடகங்களிலும் மற்ற மாவட்டங்களிலும் காட்டுத் தீப் போல பரவிய நிலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
மொத்தத்தில் இந்த ஆர்ப்பாட்டம் பத்திரிக்கையாளர்களின் வலிமையையும் ஒற்றுமையையும் உணர்த்தும் விதமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.