ஊரட‌ங்கு நடை பெறும் பொழுது சென்னை, தண்டையார் பேட்டையில் சாலை மறியலால் பரபரப்பு…

சென்னை தண்டையார் பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவில் உள்ள சமூக நலக் கூடத்தில் வெளி மாநில மக்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர்.

இதனை கேள்வியுற்ற அப் பகுதி வாழ் மக்கள் அவர்களை அங்கு தங்க வைக்க கூடாதென எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வீதிக்கு வந்து ஆர்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் அளவில் பேச்சு வார்த்தை நடத்தியும் மக்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.

இது பற்றி மக்கள் கூறுகையில், ஏற்கனவே கொரானா வைரஸ் பீதியில் அல்லல்பட்டு வரும் நிலையில், நெருக்கடி நிறைந்த இந்த பகுதியில் இவர்களை கொண்டு வருவது ஏன் என கேள்வி எழுப்பினர்.

மேலு‌ம் பள்ளிகள், ஆலயங்கள், மருத்துவமனை நிறைந்த இப்பகுதியில், அவர்களை அழைத்து வரக்கூடாது என்ற கோரிக்கையினை ஏற்ற அதிகாரிகள் இங்கு வருபவர்களை வேறு இடத்திற்கு மாற்ற உறுதியளித்ததன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.

-ஜீனியஸ் டீம்

Check Also

வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 விரைவில் அமல்படுத்தப்படும்!

வாடகை வீடுகளில் குடியேற  இனி 2 மாத அட்வான்ஸ்  கொடுத்தால் போதும் மேலும் வீட்டு உரிமையாளர்கள் வீட்டு வாடகை ஒப்பந்தங்களை …