கொரோனா உலக யுத்தம்! கொரோனா வின் கொடுமையை கவிதையாய் வடித்த
தமிழ் @ சகா.முருகேசன்

கொரோனா உலக யுத்தம்!

கொரோனா அரக்கனே….
கொத்துக்கொத்தாய் கொல்கிறாயே மனித இனத்தை…..
விளக்கினை….. விளக்கொளியை கண்ட வீட்டில்பூச்சியாய் வீதியில் விழுந்து விதிமுடிக்கின்றதே மனிதகுலம்……

கூடிக்களித்த மனிதஇனம் உன்னால்..
கூடினால் கழிகின்றதே..
ஆடிகளித்தோரெல்லாம் உன்னால் ஓடி அடங்கினரே ஒத்தையாய்…

தொட்டால் வரும் தொற்றுநோய்…. நீ
தொட்ட இடமெல்லாம்..
தொற்றுகிறாயே…. நீ தொற்றல்ல துரத்துநோய்….

ஒட்டி வருகிறாய் கண்ட பொருளிலெல்லாம்…
தேடி வருகிறாய் மூச்சுக்காற்று நீா்த்திவலையுடன் கூடி..

கூற்றினைக்கண்டது போல் மானிடரெல்லாம்.
ஓடி ஒளிந்தோம் வீட்டையடைத்து….
பாடிப்பறந்த உலகின்
வாசலடைத்து……

ஒன்றோடு ஒன்று சோ்ந்தால் இரண்டாகுமது இயற்கணக்கு…
ஒன்றோடு ஒன்று சோ்ந்தால் மூன்றாகுமது
இல்லறக்கணக்கு…
ஒன்றோடு ஒன்று சோ்ந்தால் ஒன்றுமில்லாமல் போகுமது…. கொரோனா கணக்கு…

கொரோனா கொடூரவாள்.. மனிதா
விழித்துக்கொள்…
உயிரற்ற வைரஸ் உன்னை உயிரற்றவனாக்கும் வல்லமை உடையது…….

ஈரேழுலகம் ஆளப்பிறந்தவனே…….
கொரோனாவின் மரணப்பிடிக்கு கொடு
மரணஅடி…..

கொரோனாவின் மாயச்சங்கிலித்தொடா்
அறுத்து…. அதன் கோரதாண்டவம் நிறுத்து……

இன்பத்திற்கு அருமருந்து மெளனம்
இப்பூவுலகு கொரோனா பிடியிலிருந்து விலக அருமருந்து தனிமை…..

இனிமை இவ்வுலகு இனிகாண வேண்டும் அனைவருக்கும் தனிமை….

ஏழைப்பணக்கார ஜாதிமதபேதமில்லை…
கொரோனாவிற்கு தொிந்திடு……..

மணிக்கிருமுறை சோப்பினால் கழுவு கையை…. அது கொரோனாவை கொல்லும் உணா்திடு மெய்யை…..

தனித்திரு கொரோனாவை தடுத்திடு……
வீட்டிலிரு கொரோனாவை வீழ்த்திடு……
முகமூடி அணிந்திடுஉன்
மூச்சினைக் காத்திடு….
விலகியிரு கொரோனாவை விலக்கிடு…..
விழித்திரு கொரோனாவை ஒழித்திடு……

காட்டுத்தீயில் அகப்பட்டதெல்லாம் சாம்பல்…. வளையில் தங்கிய எலிகளைத்தவிர……..

கொரோனா வைரஸ் தீயில் அகப்பட்டவரெல்லாம் அம்பேல்….. வீடுகளில் தங்கிய மனிதா்களைத்தவிர……

கறி காய் வாங்க கூடாதே….. கொரோனாவிற்கு பலி
ஆகாதே………
பசித்திரு உயிரோடிருக்க உணவெடு….
ருசியோடு புசிக்கப் பொறுத்திடு……
பசித்தோருக்கெல்லாம் உணவிடு இத்தருணத்தில்……

உலகைக் காத்திட…
பரவாமல் தடுத்துக்கொல்வோம் கொரோனா அரக்கனை…
வெற்றி மனித குலத்திற்கே…..

பாசத்துடன்….
தமிழ் @ சகா.முருகேசன்

Check Also

தொடரும் PPFA வின் மக்கள் நலப்பணி…

கொரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் மக்களுக்காக கடந்த 15 நாட்களுக்கு மேலாக மதிய உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் …