கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமாக பரவுவதால் தமிழக அரசு, இரவு நேர ஊரடங்கு (இரவு பத்து மணி முதல் அதிகாலை 4 மணி வரை) ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.
இதன் விளைவாக தமிழக காவல்துறையும் தன் பங்கிற்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், N1 இராயபுரம் காவல் நிலையம் ஆய்வாளர் (சட்டம், ஒழுங்கு) திரு. காசியப்பன் அவர்கள் தன்னார்வத்துடன் இராயபுரம் பம்மிங் ரோடு நாகவல்லியம்மன் கோயில் அருகே பொதுமக்களுக்கான விழிப்புணர்வு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,
“உங்கள் நலனுக்காகத்தான் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. முககவசம், தனி மனித இடைவெளி கடைபிடியுங்கள். உங்களின் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ளுதல் அவசியம். காவல் துறையினரின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பினை தருமாறும், மருத்துவ ரீதியாக அரசு அறிவித்துள தடுப்பூசி யினையும் பயன்படுத்திடுமாறும் கேட்டுக்கொண்டார்.
காவலர் உங்கள் நண்பன் என்பது நிஜமே. அந்த வகையில் நோய் தடுப்புக்கான விழிப்புணர்வினை சுருக்கமாக தந்த ஆய்வாளர் அவர்களை, அவரது உரையினை கேட்ட பொதுமக்கள் பாராட்டுதல்களை தெரிவித்தனர்.
செய்தியாக்கம்:
“கிங்மேக்கர்” Ln B. செல்வம்
ஒளிப்பதிவு: ” ஜீனியஸ்” K.சங்கர்