தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை ஊராட்சியில் 2021 – 2022 ஆம் நிதியாண்டில் 1.46 லட்சத்தில் நூலகம் கட்டப்பட்டது. இந்நூலக கட்டிடம் இது நாள் வரை பயன்பாட்டுக்கு வராமல் மூடிய நிலையில் உள்ளது.
இதனால் மக்கள் வரிப்பணம் வீணாவதை மாவட்ட ஆட்சியர் கண்டும் காணாது இருப்பதேன் என மக்கள் வேதனை. இது மட்டுமல்லாமல், இந் நூலக கட்டிடத்தின் முன் இரவு நேரத்தில் குடிமகன்கள் மது அருந்தும் பாராக மாற்றியுள்ளது தான். போட்டி தேர்வுக்கு இத்தகைய சூழலில் தயாரகுவதற்கு இந்த நூலகம் திறந்திருந்தால் இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமே.
ஆகவே, இளைஞர்களின் கனவினை விரைவில் நிறைவேற்ற அரசு நிர்வாகம் செய்திட வேண்டும். சமூக விரோத செயல்கள் நடைபெறுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி