பொதுவிநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கான சிறப்பு குறை தீர்வு முகம் நடைபெற்றது.
அதன்படி வேலூரில் மேல் மொனூர் கிராமத்திலும், காட்பாடியில் கரசமங்கலத்திலும், குடியாத்தத்தில் சின்னசேரிலும், கே.வி குப்பத்தில் செஞ்சி கிராமத்திலும், பேர்ணாம்பட்டில் கீழ் ஆலகுப்பத்திலும் (மொகளூர் ) சிறப்பு முகாம் நடந்தது.
முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல்,பெயர் நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் புதிய குடும்ப அட்டை நகல், குடும்ப அட்டைக்கு மனு செய்தல், கைபேசி எண் பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி