கொலை வழக்கில் குற்றவாளி விரைவில் கைது வேலூர் எஸ்பி தகவல்!!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளுர் மதுராம்பிகை நகரை சேர்ந்தவர் ஹையாத் பாஷா (36) கூலித் தொழிலாளி இவர் கடந்த 12ம் தேதி கள்ளூர் காந்திநகர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் மாட்டுத்தீவனம் பயிர்களுக்கு நடுவே நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஹையாத் பாஷா கொலை செய்யப்பட்ட இடத்தை மாவட்ட எஸ்பி மணிவண்ணன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி உள்ளிட்ட போலீசார் உடன் இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து எஸ் பி நிருபர்களிடம் கூறுகையில் ஹையாத் பாஷா கொலை சம்பவம் தொடர்பாக என்னுடைய தலைமையிலும் துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி ஆகியோர் தலைமையிலும் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு தனிப்படையினர் கேரள மாநிலத்திற்கும், மற்றொரு தனிப்படையினர் ஆந்திர மாநிலத்திற்கும் சென்றுள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக துப்பு கிடைத்துள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள், மேலும் கொலை நடந்த இடத்தில் இருந்த பொருட்கள் தடய அறிவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

Check Also

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்மை தரும் ஆண்டாய்,வளம் தரும் ஆண்டாய் 2026 அமைந்திட அனைத்து நல் உள்ளங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! போலீஸ் …