போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில், 05.10.2024, சனிக்கிழமையன்று , காலை 11 மணியளவில், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் தலைவர் . S. இதயாத்துல்லா தலைமையிலும், மாவட்ட செயலாளர் . A. சையது சுலைமான் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்ட போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில இணை செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” . MJF Lion Dr லி. பரமேஸ்வரன்,
போலீ ஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில இளைஞரணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி துணை ஆசிரியருமான L. வேலாயுதம் ஆகியோரது திருக்கரங்களால் , இருவருக்கு ( பூ வியாபராம், செருப்பு தைக்கும் தொழிலாளி) நிழற் குடைகளும், மாற்றுத் திறனாளி ஒருவருக்கு மின்சேமிப்பு விளக்கும் வழங்கி சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட துணை தலைவர் . J. பாபு, இளைஞரணி தலைவர் . G. மணிகண்டன், இளைஞரணி செயலாளர். B அசன், மாவட்ட தொழில்நுட்ப அணி தலைவர் I. ஏஜாஸ் அஹமத், ஒருங்கிணைப்பாளர் . நஸ்ருதீன், மாவட்ட உறுப்பினர்கள் திரு. Y. முகமது அனிபா. எஸ் சமியுல்லா, திரு. சையது கதிர், திரு. பாஷா ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
இந் நிகழ்வினை பற்றி மாவட்ட தலைவர் நம்மிடம் பேசுகையில், “மாநில தலைவரது வ(வி)ழிக்காட்டுதலின்படி,யும்,
” விளிம்பு நிலை மக்களை தேடி நாம்…
மக்களோடு நாம்…! எனும் அவரது தாரக மந்திரத்திற்கு செயல்வடிவம் தரும் வகையிலும் இத்தகைய நல்லதொரு திட்டத்தினை எமது மாவட்ட நிர்வாகளின் முழுமையான பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்புடன் நடத்தியிருக்கின்றோம்.” என்றார்.
இவர்களது சீரிய முயற்சிக்கு வாழ்த்துக்களையும், தொடர்ந்து இது போன்ற திட்டங்களையும் செயலாக்கம் செய்து சங்கத்திற்கான வளர்ச்சியை செய்திடுங்கள் என பாராட்டுக்களை தெரிவித்தோம்.