சென்னை துறைமுகத்தில் நெதர்லாந்து நவீன பாய்மரக்கப்பல்

மத்திய அரசு, துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து மேம்பாட்டுக்காக வெளிநாட்டு சுற்றுலா கப்பல்கள் சென்னை துறைமுகம் வந்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அவ்வகையில் நெதர்லாந்து நாட்டின் ” ஸ்டாட் ஆமஸ்டர்டாம்” என்ற நவீன பாய்மரக்கப்பல் சென்னை துறைமுகத்திற்கு கடந்த 21ந் தேதி வந்தடைந்தது.

இக் கப்பலை வரவேற்ற சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் பேசுகையில், ” நவீன பாய்மரக்கப்பலான ஸ்டரிட் ஆமஸ்டர்டாம் கப்பல் சென்னை துறைமுகத்திற்கு வருகைத் தந்துள்ளது பெருமையான நிகழ்வு என்றார்.

இந் நிகழ்வு மூலம் சென்னை துறைமுகம் உலகளவில் கூட்டமைப்புகளை மேம்படுத்தவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் சர்வதேச துறைமுக சேவைகளை உறுதிபடுத்துகிறது.

இதன் மூலம் இந்தியா, நெதர்லாந்து இடையேயான ஆழமான உறவினை எடுத்துக் காட்டுகிறது ” என்றார். இந்த கப்பல் டிசம்பர் 1ந் தேதி வரை சென்னை துறைமுகத்தில் இருக்கும். அவ்வேளையில், செயற்கை நுண்ணறிவு, வாழ்க்கை அறிவியல், உடல்நலம் பன்முகத்தன்மை போன்ற கருப்பொருள்களை மையமாக வைத்து நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

நவீன பாய்மரக்கப்பலை பற்றி…
நெதர்லாந்து நாட்டின் ராஸ்ட் ஸ்டாட் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த கப்பல் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புறப்பட்டது. அடுத்த 2025 ஆண்டு ஆகஸ்ட் வரை உலகம் முழுவதும் உள்ள முக்கிய நாடுகளில் கடல் வழி பயணம் மேற்கொள்ளும் வகையில் பயணம் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் 27 பணியாளர்கள், 8 சுற்றுலா பயணிகள் உள்ளனர். பாரம்பரிய கடல்சார் வடிவமைப்பில் நவீன பாய்மரக்கப்பல் 2,200 சதுரமீட்டர் பரப்பளவில், பயிற்சிக்காகவும், விருந்தினர்களுக்கான வாடகை கப்பலாகவும் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.
சென்னை துறைமுகத்தில் தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு டிசம்பர் 1 ந்தேதி மும்பை துறைமுகத்திற்கு செல்லும்.

Check Also

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்மை தரும் ஆண்டாய்,வளம் தரும் ஆண்டாய் 2026 அமைந்திட அனைத்து நல் உள்ளங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! போலீஸ் …