காவல்துறையினர் நண்பர்கள்…காவல்துறை மக்களுக்காகவே…!”
எனும் தாரக மந்திரத்தோடு, கடந்த ஆண்டு (2023) துவக்கப்பட்ட போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் ராணிப்பேட்டை மாவட்டம்.
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில இணை செயலாளரும், இராயபுரம் ஹெரிடேஜ் அரிமா சங்கத்தின் செயலாளரும், சீர்மிகு தலைவருமான, ” சேவை நாயகன்-நட்பின் மகுடம்” MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, பல்வேறு நலத்திட்டங்கள், கல்வி சார்ந்த விழிப்புணர்வு போன்றவற்றில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு சிறப்பான வகையில் செயல்பட்டு வருகின்ற மாவட்ட தலைவர் M.S. மான்மல் அவர்கள் தலைமையில், மாவட்ட செயலாளர் M.S.குணசீலன் அவர்கள் முன்னிலையில் , 21.12.2024, சனிக்கிழமை மாலை 7 மணியளவில், அரக்கோணம், அருள் பேட்டரி வளாகத்தில் சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
பிறக்கும் புத்தாண்டில் ( 2025) மாவட்டம் சார்பில் செயல்படுத்திடும் திட்டங்கள், புதிய உறுப்பினர்களின் சேர்ப்பித்தல் ஆகியன முக்கிய ஆலோசனைகளாக பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இக் கூட்டத்தில், R. வெங்கட்ரமணன் , T. கமலக்கண்ணன், ( மாவட்ட துணை தலைவர்கள்) B. சீனிவாசன் ( மாவட்ட செய்தி தொடர்பாளர்) J. முனுசாமி, R. யோகராஜ் ( செயற்குழு உறுப்பினர்கள்) ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி