PPFA திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சார்பாக யுனானி இலவச மருத்துவ முகாம்…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளரும், இராயபுரம் ஹெரிடேஜ் அரிமா சங்கத்தின் பொருளாளரும், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அறங்காவலரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் பிரதி புதன்கிழமை தோறும் நடைபெற்று வரும் பொதுமக்களுக்கான இலவச யுனானி பொது மருத்துவ முகாம் 03.12.2025, புதன்கிழமை , மாத்தூர் அல் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளி வாசல் வளாகத்தில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் தலைவர் S.இதயத்துல்லா தலைமையில், மாவட்ட செயலாளர் A. சையது சுலைமான் முன்னிலையில் நடைபெற்றது.

மேலும், இம் முகாமில் மாவட்ட துணை தலைவர் J. தஸ்தகீர் பாஷா, மாவட்ட இளைஞரணி தலைவர் G. மணிகண்டன், மாவட்ட இளைஞரணி செயலாளர் S. சந்துருகுமார் மாவட்ட துணை செயலாளர் P.S. சுரேஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் J. பாபு, மாவட்ட உறுப்பினர்கள் S B. செந்தில்குமார், S. நவாப் ஜான், S.S. மணிகண்டன் மற்றும் மாத்தூர் TNHB மக்கள் நல சங்க நிர்வாகிகள், அல் மஸ்ஜித் அக்ஸ ஜூம்மா பள்ளி வாசல் நிர்வாகிகள்

ஆகியோர் கலந்துக் கொள்ள, 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ” திட்வா” புயல் நேரத்தில் காற்றும், மழையையும் பொருட்படுத்தாது முகாமில் கலந்துக் கொண்டு மருத்துவ பயனை பெற்றனர்.

Check Also

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்மை தரும் ஆண்டாய்,வளம் தரும் ஆண்டாய் 2026 அமைந்திட அனைத்து நல் உள்ளங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! போலீஸ் …