பொங்கல் என்றாலே உலக தமிழர்களின் பாரம்பரியத்துக்கு உதாரணம் என சொல்லலாம்.
கிராமத்தில் தான் பொங்கல் விழா களைகட்டும் என்பதை உடைத்தெறிந்து குடியிருப்போர் உரிமையாளர்கள், சமத்துவ பொங்கல் விழா, 15.01.2026, வியாழக்கிழமை , காலை 10 மணி முதல், சென்னை, திருவொற்றியூர் ” ரேடியன்ஸ் ப்ளோரிஷ் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் உற்சாகமான பொங்கல் விழாவில் பங்கேற்று,
ஆட்டம், நாட்டம், கொண்டாட்டம் என பெரியோர் முதல் சிறியோர் வரை தமிழ் கலாச்சாரத்தை எடுத்து காட்டிடும் வகையில் உடையணிந்து வந்து , வண்ண கோலங்களால் அலங்கரித்த இடத்தில் மண்பானையில் பொங்கலிட்டு, சூரிய பகவானுக்கு படைத்து, திருநாளை சிறப்பாக கொண்டாடினர்.
இது எங்களின் குடும்ப விழா, ஒற்றுமை விழா என எண்ணும் வகையில் அமைந்ததாக கலந்துக் கொண்டோரின் உற்சாக குரல் கேட்டது குறிப்பிடதக்கது.
குடியிருப்போர் உரிமையாளர்களின் முழுமையான ஏற்பாட்டில், இனி இது போன்ற விழா எங்களுக்கு சொல்ல முடியாத ஆனந்தத்தை அளித்தது என தெரிவித்தனர்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி




