சென்னை: அம்மா உணவகம், அம்மா குடிநீரை அடுத்து ஏழை மக்கள் குறைந்த விலையில் படம் பார்க்க அம்மா திரையரங்கம் அறிமுகப்படுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் நிதிக்குழு தலைவர் சந்தானம் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது மேயர் பல்வேறு புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
அம்மா தியேட்டர்ஸ் அம்மா திரையரங்கம், அம்மா வாரச்சந்தை, அம்மா தங்கும் விடுதி, அம்மா உண்டு, உறைவிட பள்ளி, அம்மா கட்டணம் இல்லா கல்வி பயிற்சி கூடம் உள்ளிட்டவை கட்டப்படும் என்று மேயர் அறிவித்தார்.
சிறு பட்ஜெட் அம்மா திரையரங்குகளில் சிறு பட்ஜெட் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுமாம். அந்த திரையரங்குகளில் மக்களுக்கு மலிவு விலையில் டிக்கெட் வழங்கப்படுமாம்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி